8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. 3 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கைது!
Author: Hariharasudhan5 February 2025, 4:58 pm
கிருஷ்ணகிரியில் 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கருக்கலைப்பு செய்த வழக்கில் மூன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவி ஒருவர் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், இந்த மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல், இவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 8ஆம் வகுப்பு மாணவி, கர்ப்பமாகி அதனை கருக்கலைப்பும் செய்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக, அதே பள்ளியைச் சேர்ந்த சின்னச்சாமி, பிரகாஷ் மற்றும் ஆறுமுகம் ஆகிய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களையும், உடனடியாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, மூன்று ஆசிரியர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், கைதான ஆசிரியர்களை தங்கள் முன் கொண்டுவர வேண்டும் என்றும் ஆவேசமாக பேசி வருகின்றனர். அதேபோல், பெற்றோர் தரப்பில், பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பல்பு மாட்ட வந்த பாலமுருகன்.. அலறிய 78 வயது மூதாட்டி : மிரட்டி மிரட்டி வன்கொடுமை செய்த கொடூரம்!
அது மட்டுமல்லாமல், மாணவி கருவுற்று, கருக்கலைப்பு செய்த விஷயம்கூட அந்தப் பள்ளிக்குத் தெரியவில்லை என்றும், பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவி ஒரு மாதமாக பள்ளிக்கு வராததால், சந்தேகத்தின் பேரில் வீட்டிற்குச் சென்றிருக்கிறார் என்றும், அப்போதுதான் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கே இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.