குடியிருப்பு பகுதியில் நுழைந்த மூன்று சிறுத்தைகள்… அச்சத்தில் மக்கள் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2023, 12:50 pm

குடியிருப்பு பகுதியில் நுழைந்த மூன்று சிறுத்தைகள்… அச்சத்தில் மக்கள் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!!

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் சிறுத்தைகள் கரடிகள் காட்டெருமைகள் சிங்கவால் குரங்குகள் போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி மக்களையும் அச்சுரித்து வருகிறது,

இந்நிலையில் சில தினங்களாக வால்பாறை பகுதியில் உள்ள காமராஜர் நகர், துளசிங்க நகர், கூட்டுறவு காலனி, கக்கன் காலனி, அண்ணா நகர், வால்பாறை டவுன் பகுதி, வாழைத்தோட்டம்,போன்ற குடிநீர் பகுதிகளில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

வீடுகளில் வளர்க்கும் நாய் கோழி ஆடு போன்றவைகளை வேட்டையாடி கொன்று சாப்பிட்டு வந்தது. இந்நிலையில் கூட்டுறவு காலனி பகுதியில் வீடு அருகில் மூன்று சிறுத்தைகள் இரவு சுமார் ஒரு மணி அளவில் நடந்து செல்கிறது.

இதை அருகில் இருந்த வீட்டில் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://vimeo.com/889386429?share=copy

குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் சிறுத்தையை அடர்ந்த வன பகுதிக்குள் விரட்ட வனத்துறையினருக்கு வால்பாறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?