மதுரை ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் அடுத்தடுத்து மூன்று பெட்ரோல் குண்டு வீச்சு : தொடரும் தாக்குதல்… ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2022, 10:43 am

மதுரை : ஆர்.எஸ்.எஸ் மூத்த நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் மதுரையில் பதற்றம் நீடித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த இருநாட்களாக இந்து அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவை, ஈரோடு மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.

ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஆர்.எஸ்.எஸ் மூத்த நிர்வாகி ஆவார். இவர் மேல அனுப்பானடி பகுதியில் குடியிருந்து வருகிறார்.

இவரது வீட்டில் இரு சக்கர வாகனத்தில் வந்த சமூக விரோதிகள் இரண்டு நபர்களால் நேற்று இரவு 7.38 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொண்டு பெட்ரோல் குண்டு வீசியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

https://vimeo.com/753462371

கோவை, ஈரோட்டை தொடர்ந்து மதுரையிலும் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பெரும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது

  • Vidamuyarchi OTT release announcement ரசிகர்ளுக்கு பொங்கல் பரிசு கொடுத்த லைக்கா…விடாமுயற்சி படத்தின் OTT-உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்…