3 வயது சிறுமிக்கு நேரக்கூடாத கொடுமை.. கட்டிவைத்து செய்த செயல்!

Author: Hariharasudhan
4 December 2024, 3:37 pm

ஹரியானாவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நுஹ்: ஹரியானா மாநிலம், நுஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 3 வயது சிறுமி. இவர் கடந்த நவம்பர் 30ஆம் தேதி மாலை, தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்து உள்ளார். ஆனால், மாலை நேரமாகியும் சிறுமி வீட்டுக்கு வரவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தேடி உள்ளனர்.

ஆனால், எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், போலீசிடம் புகார் அளித்து உள்ளனர். பின்னர், இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை போலீசார் கண்டுபிடித்தனர்.

Three year old girl sexual assaulted in Haryana Nuh

பின்னர், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பிரேதப் பரிசோதனை முடிவில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது. எனவே, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இதையும் படிங்க: ’நான் குரு தான்டா பேசுறேன்’.. உருவ ஒற்றுமையால் அண்ணனை சிக்கவைத்த தம்பி.. கோர்ட்டையே அதிரவிட்ட சம்பவம்!

இந்த விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த 34 வயது நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், அவர் திடீரென தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து, அந்நபரைக் கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Three year old girl sexual abuse in Haryana Nuh

இந்த நிலையில், டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் உள்ள மரோரா என்ற கிராமத்திற்கு அருகில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் அந்த சிறுமியை கடத்தி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

அப்போது, அந்த சிறுமி அலறி துடித்ததால், சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 59

    0

    0

    Leave a Reply