பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய கார் : ஸ்பாட்டில் நடந்த விபரீதம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2023, 9:06 am

பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய கார் : ஸ்பாட்டில் நடந்த விபரீதம்!!!

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே புதுக்கோட்டை என்கிற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் பளையக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ஐயப்பன், வீரையன் என்பவரின் மகன் ரவி, சௌந்தராஜ் என்பவரின் மகன் சக்திவேல் இவர்கள் மீது கார் மோதிய விபத்தில் மேற்கண்ட மூன்று நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.

உடனடியாக வடுவூர் காவல் நிலைய ஆய்வாளர் சம்பவம் இடம் சென்று உடல்களை கைப்பற்றி, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லலூரிக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

சம்பத்திற்கு காரணமான கார் ஓட்டுனரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர் . மேற்கண்ட விபத்து நடந்த சம்பவம் இடத்தை உடனடியாக மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நேரில் சென்று விபத்துக்கான காரணத்தை ஆய்வு மேற்கொண்டார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!