நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் ‘Chilla Chilla’ பாடல் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் அடுத்த படமான ‘துணிவு’ 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய்யின் ‘வாரிசு’ படத்துடன் மோதுவதால், இரண்டு படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய், அஜித் படம் ஒரே நேரத்தில் வெளியாவதால், இந்தப் பொங்கல் பண்டிகை போட்டியான பண்டிகையாகும்.
வினோத் இயக்கத்தில், ‘துணிவு’ திரைப்படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆக்ஷன் த்ரில்லர் மற்றும் திரைப்படத்தில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விஜய்யின் 66-வது படமான வாரிசு படம், 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு உலகம் முழுவதும் படம் வெளியாகும் என அந்தப் படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களின் வியாபாரமும் பரபரப்பாக நடந்து வருகிறது. எந்தப் படம் அதிக தியேட்டர்களில் வெளியாகும் என அது பற்றிய தகவல்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. ‘துணிவு’ படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவதால் ‘வாரிசு’ படம் அதிக தியேட்டர்களில் வெளியாகுமா என்ற சந்தேகம் இன்னும் இருந்து வருகிறது.
இதனிடையே, ‘வாரிசு’ படத்தின் பொங்கல் வெளியீடு போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, அப்படத்தின் ‘தீ தளபதி’ எனும் 2 சிங்கிள் அண்மையில் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. ஆனால், துணிவு படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாததால், அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், துணிவு படத்தின் ‘Chilla Chilla’ பாடலின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, டிசம்பர் 9ம் தேதி இந்தப் பாடல் வெளியாக உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ரசிகர்கள் தெறி மோடில் உள்ளனர். இந்தப் பாடலோடு, பொங்கலுக்கு வெளியாவது குறித்த அறிவிப்பும் இடம்பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
This website uses cookies.