அஜித்தின் ‘துணிவு’: பெரும் தொகைக்கு சாட்லைட் உரிமத்தை பெற்ற பிரபல தொலைக்காட்சி..!

Author: Vignesh
26 September 2022, 4:28 pm

எச். வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் துணிவு. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார் நடித்து வருகிறார்.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் First லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாகியுள்ள இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான கலைஞர் டிவி பெரும் தொகையை கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இன்னும் படப்பிடிப்பே முடியாத நிலையில் அதற்குள் துணிவு படத்தின் உரிமைகள் விற்றுப்போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 505

    0

    1