ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஜூலை 11-ம் தேதி முதல் 16 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர்தகுதித் தேர்வு தாள் 1, 2 தொடர்பான அறிவிப்பு, ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளம் வாயிலாக கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வுதாள் 1-க்கு 2,30,878 பேர், தாள்2-க்கு 4,01,886 பேர் என 6,32,764 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனர்.
விண்ணப்பத்தாரர்களின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, 2 ஆகியவற்றுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பத்தில் வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை திருத்தம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக் கைகளும் பரிசீலனை செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
This website uses cookies.