சிசிடிவி கேமராக்களை மட்டும் திருடும் டிப் டாப் ஆசாமி : அசால்ட்டாக கழட்டி சென்ற காட்சிகள் வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2023, 1:47 pm

சிசிடிவி கேமராக்களை மட்டும் திருடும் டிப் டாப் ஆசாமி : அசால்ட்டாக கழட்டி சென்ற காட்சிகள் வைரல்!!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி.தேவனூர் கூட்டுச் சாலை பகுதியில் திருக்கோவிலூர் – விழுப்புரம் பிரதான சாலையில் மணம்பூண்டி பகுதியை சேர்ந்த பார்த்திபன்(40) என்பவர் பழனியப்பா டிரேடர்ஸ் எனும் பெயரில் வீடுகட்ட தேவையான மொத்த பொருட்களையும் வைத்து விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடையின் உரிமையாளர் பார்த்திபன் கடந்த 6 நாட்களாக வெளியூர் பயணம் மேற்கொண்ட நிலையில், மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் வெளியே சாலை மற்றும் கடையை பார்த்தபடி வைக்கப்பட்டு இருந்த 35ஆயிரம் மதிப்பிலான இரண்டு சிசிடிவி கேமராக்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடந்த பத்தாம் தேதி நள்ளிரவில், கொட்டும் மழையிலும் கடை அமைந்திருக்கும் பகுதிக்கு வந்த டிப் டாக் ஆசாமி ஒருவர் கேமரா கம்பம் அருகே நின்றிருந்த லாரியின் மீது ஏறி கேமராவை லாவகமாக கழட்டி சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராவை திருடி சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சிசிடிவி கேமராவை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 6 மாதங்களில் இதுபோன்று அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மர்ம நபர்கள் சிசிடிவி கேமராக்களை மட்டும் குறிவைத்து திருடி வருவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை குறி வைத்து திருடும் மர்ம நபர்களால் இப்பகுதியில் உள்ள வணிகர்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

சிசிடிவி கேமராக்களை குறிவைத்து திருடும் திருடர்களால் பெரும் திருட்டு சம்பவம் ஏதும் நிகழும் முன்னர் போலீசார் அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் வணிகர்களும், பொதுமக்களும் மாவட்ட காவல் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 361

    0

    0