‘உனக்கு உட்காரதுக்கா கட்டி வச்சிருக்காங்க’… பேருந்து நிலையத்தில் பெண்கள் மீது தண்ணீரை ஊற்றிய கடைக்காரர்.. அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
21 October 2023, 9:04 am

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், பேருந்து வருகைக்காக அமர்ந்திருந்த இடத்தில் பெண்கள் மீது கடைக்காரர்கள் தண்ணீர் ஊற்றியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், மற்ற பேருந்து நிலையங்களை இணைக்கும் இணைப்பு பேருந்துகளும், மாநகரின் பிற பகுதிகளுக்கு செல்வதற்கான நகரப் பேருந்துகளும் வந்து செல்கிறது. இதன் காரணமாக மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், பேருந்துக்காக செல்லும் பொதுமக்கள் அங்கிருக்கும் கடை வாயில்களில் அமர்வது வழக்கம். அந்த வகையில், பேருந்து வருவதற்காக கடை வாயிலில் பெண்கள் அமர்ந்திருந்த இடத்தில் கடைக்காரர்கள் தண்ணீர் ஊற்றி அவர்களை விரட்டியடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://player.vimeo.com/video/876594472?badge=0&autopause=0&quality_selector=1&progress_bar=1&player_id=0&app_id=58479

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, கடைக்காரர்களே நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்கள் பேருந்து வருகைக்காக பொதுமக்கள் அமரும் இடத்தில் தண்ணீர் ஊற்றி அநாகரீகமாக நடந்து கொள்வது வருத்தமளிப்பதாக உள்ளது, என தெரிவித்தனர்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 457

    0

    1