திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து இருவர் உயிரிழப்பு!

Author: Hariharasudhan
18 November 2024, 5:32 pm

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் உள்ளூர் மட்டுமல்லாது, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

அதிலும், கார்த்திகை மாத விரதம் தொடங்கி உள்ளதால், பலரும் மாலை அணிவிப்பதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், இந்த கோயிலில் யானை ஒன்றும் வளர்க்கப்படுகிறது. ‘தெய்வானை’ என்ற பெயர் கொண்ட இந்த யானை, அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று (நவ.18) உணவு வழங்குவதற்காக பாகன் உதயகுமார் என்பவர் தெய்வானை யானை அருகே சென்று உள்ளார். அப்போது அவருடன், உதயகுமாரின் உறவினரான களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த சிசுபாலன் என்பவரும் இருந்து உள்ளார். அந்த நேரத்தில், இருவரையும் யானை பலமாக மிதித்ததாகத் தெரிகிறது.

TIRUCHENDUR TEMPLE SEA VIEW

இதில் இருவரும் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் வந்து உள்ளனர். ஆனால், அதனிடையே சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். மேலும், படுகாயங்கள் உடன் கிடந்த உதயகுமாரை மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: தவெக – அதிமுகவா? இது வேற.. புது ரூட் சொல்லும் சீமான்!

ஆனால், அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, யானை வளர்க்கும் இடத்தில் என்ன நடந்தது, இந்த உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • kalakalappu 3 movie update குஷ்பூவுடன் கை கோர்த்த பிரபல தொழில் அதிபர்…கலகலப்புக்கு இனி பஞ்சமில்லை..!
  • Views: - 46

    0

    0

    Leave a Reply