திருச்சி திருச்சி காவிரி ஆற்றில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக
கஞ்சா போதையில் இருந்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அன்பு நகர சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ரஞ்சித்கண்ணன் (18) திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். திருச்சி மாம்பழச்சாலை பகுதியில் இவரது உறவினர் வீடு உள்ளதால் அடிக்கடி வந்து பார்த்து செல்வது வழக்கம்.
நேற்று வழக்கம்போல் ரஞ்சித் கண்ணன் தனது உறவினர் வீட்டிற்கு வந்தபோது காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகம் ஓடுவதை காண்பதற்காக கீதாபுரம் தடுப்பணைக்கு சென்றார். அப்போது கீதாபுரம் பகுதியை சேர்ந்த சுலுக்குசுரேஷ் (26), மதன்குமார் (23), விஜய் (23), மதன், பிரகதீஸ்வரன் ஆகியோர் கஞ்சா போதையில் இருந்துள்ளனர்.
அவர்கள் ரஞ்சித்கண்ணனை பார்த்து நீ யார் புதிதாக இருக்கிறாய் என கூறி அவரிடம் சண்டையிட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். காயம்பட்ட ரஞ்சித்கண்ணன் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக உறவினர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ரஞ்சித்கண்ணன் உயிரிழந்தார். காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.