திருப்பரங்குன்றம் இந்துக்களுக்கு சொந்தம்.. தர்காவை வேறு இடத்துக்கு மாத்துங்க : ஹெச் ராஜா பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2025, 11:42 am

மத நல்லிணக்கம் விரும்புவர்கள் இந்து முஸ்லிம் இடையே இணக்கமாக வாழனும் நினைபவர்கள் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம் என எச்.ராஜா கூறியுள்ளார்.

டெல்லியில் இருந்து காரைக்குடி செல்வதற்காக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அருகே பெருபான்மையோடு ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது.

இதையும் படியுங்க: முட்டை பொரியலில் எலி பேஸ்ட்.. மகளை கொல்ல முயன்ற கொடூரத் தாய்!!

கடந்த 12 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியினுடைய ஊழல், நகர் முழுவதும் அசுத்தமாக பராமரிக்கப்படாத மோசமான ஆட்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதானல் இம்முறை பாஜக அரசாங்கத்தின் சாதனைக் அங்கு நல்ல பலன் அளிக்கும் சூழல் உள்ளது.

தமிழகத்தில் இந்து விரோதத்தில் அராஜகம் நாளுக்கு நாள் அக்கிரமங்கள், அராஜகங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்து கோவிலை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிற ஒரு ஆட்சி.

பழனியில் முருகனுக்கு மாநாடு நடத்தி சனாதன ஹிந்து தர்மத்தை மலேரியா கொசு மாதிரி அடிக்க வேண்டும் என்று சொன்ன தீய நபருக்கு மகுடம் சூட்டுவதற்காக நடந்தது என்று தெளிவாகத் தெரிகிறது.

லண்டன் தீர்ப்புப்படி முழு மலையும் முருகனுக்கு சொந்தம் என்று சொல்லி இருக்கிறார்கள். மத நல்லிணக்கம் என்கிற புண்ணாக்கு, புடலங்காய் எல்லாம் எப்போது வருகிறது. சிக்கந்தர் என்பவர் எப்படி மலையில் இறந்தார், எதற்கு மலைக்கு வந்தார், தர்கா வருவதற்கு முன்பாக அங்கு இருந்தது யார். காசி விஸ்வநாதர் கோவில் தானே இருந்தது பொது சிக்கந்தருக்கு என்ன வேலை அங்கு. காசி விஸ்வநாதர் கோயிலை இடிப்பதற்காகத்தான் சிக்கந்தர் போனார் என்கிற கருத்து மக்களிடையே உள்ளது.

RAja

இந்துக்களுக்குத்தான் அந்த மலை சொந்தமே தவிர உனக்கு என்ன வேலை. இவன் மத நல்லிணக்கம் விரும்புவர்கள் இந்து முஸ்லிம் இடையே இணக்கமாக வாழனும் நினைபவர்கள் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம். அயோத்தியும் இதை போல் தான் ஆராய்ச்சி அடிப்படையில் கொடுக்கப்பட்டது, அதைப்போல் வேண்டுமென்றால் இந்துக்களுடன் இணக்கமாக வேண்டும் என்பவர்கள் செய்யலாம்.

இங்கு இருக்கக்கூடிய சென்ட் தாமஸ் சர்ச் தான் கபாலி கோவில். இதையெல்லாம் திருமாவளவன் பெருமையாக சொல்கிறார். இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை நீங்கள் ஆண்து ஆண்டு காலமாக அபாகரிப்பீர்கள், ஆதரிப்பீர்கள். சிங்கம் ஆட்டுக்குட்டியை சாப்பிட்டால் சிங்கத்துடன் ஆடு ஐக்கியம் ஆகிவிட்டதாக சொல்வதைப் போல அழித்துவிட்டால் ஒன்றாகி விடுவோம் என்று சொல்வது சரியாக இருக்காது.

தமிழக அரசு இந்து விரோதக் கொள்கையை கைவிட வேண்டும். இல்லையென்றால் 2026 இந்துக்கள் அனைவரும் தேசியவாதிகள், தமிழை நேசிப்பவர்கள், நீங்கள் தமிழ் விரோதிகள். ஈவேராவின் பெயரை சொல்பவர்கள் தமிழை விரும்புவர்களாக இருக்க முடியாது. தமிழை சனியன் காட்டுமிராண்டி கூட்டம் என்று சொன்ன ஈவராவின் கூட்டம் தமிழ் பற்றாளர்களாக இருக்க முடியாது.

நாளைக்கு இந்துத்துவாவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தர வேண்டும். மயிலாடுதுறையில் பிளக்ஸ் வைத்தவனை கைது செய்து நீதிமன்றம் அனைத்து செல்கிறார்கள் நீதிபதியை கேட்கிறார்.

H

இவரை எதிர்த்து அழைத்து வந்தீர்கள் என்று கேட்கிறார். இந்துக்களை துன்புறுத்துவது தான் இந்த அரசின் வேலை. உதயநிதி ஸ்டாலின் நான் கிறிஸ்தவன், அதில் பெருமைப்படுகிறேன் என்று சொல்கிறார், சேகர் பாபு அல்லேலூயா என்றார் அதற்குத்தான் அவரை அல்லேலூயா பாபு என பெயர் வைத்தேன்.

அயோத்தி பிரச்சனைக்கு பிறகு இந்து எழுச்சியால் யாரும் உத்தர் பிரதேசத்தில் அதிகாரம் வர முடியவில்லை அந்த எழுச்சி இங்கு வரும்.

144 தடை குறித்த கேள்விக்கு: நவாஸ்கணி வந்தபோது இந்த 144 இல்லை. இந்துக்களை துன்பப்படுத்தி வேறு மதத்திற்கு தள்ளிவிட வேண்டும் என்பதுதான் ஸ்டாலின் அரசின் எண்ணம். திருப்பரங்குன்றத்திற்கு வாங்கள் என்று சொன்னால் கைது செய்வீர்களா, அராஜகம் இல்லையா, நீதித்துறை தீர்ப்பில் சொல்லி இருக்கிறது.

H raja

அந்த இடம் ஸ்ரீ கந்தர் மலை தான். சிக்கந்தர் அங்கிருந்த கோவிலை இடிக்க போனதாகவும் அதனால் அங்கிருந்த முருக பக்தர்கள் அவரை தாக்கியதாகவும் கருத்து உள்ளது இந்துக்கள் மலை மீது செல்வதற்கு நியாயம் உள்ளது முஸ்லிம்க்கு அங்கு என்ன வேலை சிக்கந்தர் எதற்காக சென்றார். ஆக்கிரமிக்க சென்றவர். பூர்வமாக சொத்துக்களை வைத்துக் கொள்வதற்கு எந்த கடவுளுக்கும் அதிகாரம் இல்லை இந்து கடவுளுக்கு மட்டும் தான் உள்ளது.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!