திருப்பதி கோவிலுக்கு மொட்டை போட வந்த சிறுவன் மரணம்… விளையாடும் போது அதிர்ச்சி சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan16 January 2025, 11:45 am
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சின்னசௌக் சினிவாஸ் – கிருஷ்ணவேனி தம்பதி தனது இரண்டு பிள்ளைகளுடன் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய 13 ம் தேதி திருப்பதி வந்து இலவச சர்வ தரிசன டோக்கன் பெற்றனர்.
இதையும் படியுங்க: பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்… பாய்ந்து வந்த கார் : நொடியில் சோகம்!!
இதில் சாமி தரிசனம் செய்ய 16 ம் தேதிக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் திருப்பதியிலேயே காத்திருந்து இன்று மாலை திருமலை பாலாஜி பஸ் ஸ்டண்ட் அருகே உள்ள பத்மநாப நிலையம் யாத்திரிகள் சமுதாய கூடம் -5 ல் முதல் மாடியில் உள்ள ஹால் எண்.3 இல் 675 எண் லாக்கர் பெற்று கொண்டனர்.
பின்னர் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தி குளித்து சாமி தரிசனம் செய்ய தயாராக காத்திருந்தனர். அப்போது வராண்டாவில் முதல் மாடியில் உள்ள சினிவாஸ் மகன் சாத்விக் ஸ்ரீனிவாச ராஜு அவரது அண்ணன் ஸ்ரீநிஹாந்த்துடன் விளையாடிக் கொண்டிருந்தபோது முதல் மாடியில் உள்ள கிரில் வழியாக கீழே தரை தளத்தில் விழுந்தான்.
இதில் உடனடியாக திருமலை அஸ்வினி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.