நள்ளிரவில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை… மது வாங்கச் சென்றவரை மனைவி கண்முன்னே தாக்கி பார் ஊழியர்கள் ; ஷாக் சம்பவம்!!

Author: Babu Lakshmanan
18 October 2023, 3:59 pm

நள்ளிரவில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை… தட்டிக்கேட்டவரை மனைவி கண்முன்னே தாக்கி பார் ஊழியர்கள் ; ஷாக் சம்பவம்!!

திருப்பூர் அருகே இரவு 10 மணிக்கு மேல் விற்ற மது விலை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், பார் ஊழியர்கள் மனைவி கண் முன்னே கணவனை தாக்கியதாக, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் – முதலிபாளையம் சிட்கோவில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு 10 மணிக்கு மேல் மனைவியுடன் வந்த நபர் ஒருவர், மனைவியை வெளியே நிறுத்தி விட்டு, டாஸ்மாக் பார் முன்பாக உள்ள பெட்டிகடையில் சட்டவிரோத மது விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் மது வாங்க சென்றதாக தெரிகிறது.

அப்போது, விற்பனை செய்யப்படும் மதுவின் விலை குறித்து அந்த நபருக்கும், பார் ஊழியர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. சத்தம் கேட்டு கணவரை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல வந்த மனைவி கண் முன்னே, டாஸ்மாக் ஊழியர்கள் அந்த நபரை தாக்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் மது வாங்க வந்ததாக கூறப்படும் நபரை மனைவி கண் முன்னே பார் ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!