உறவு முறை தங்கையுடன் காதல்.. எதிர்ப்பு மீறி திருமணம் : ஊரை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்த தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2022, 3:55 pm

திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்த மதுரையை சேர்ந்த காதல் தம்பதியினர் தங்களின் விருப்பப்படி தங்களை வாழ விடாததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர்கள் மாரி (வயது 20) , சீத்தா (வயது 16) காதல் தம்பதியினர். இவர்கள் உறவு முறையில் அண்ணன் தங்கை என்பதால் இவர்கள் காதல் விவகாரம் இவர்களது வீட்டிற்கு தெரிய வரவே இருவரது உறவினர்களும் இவர்களை பிரித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்பதற்காக கடந்த ஐந்தாம் தேதி மதுரையில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் திருப்பூர் வந்து கடுக்கார் தோட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர் .

மேலும் வாழ்வாதாரத்திற்காக அருகில் உள்ள கட்டட வேலைக்கு இருவரும் சென்று வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் காணவில்லை என சீதாவின் பெற்றோர் மதுரை திருமங்கலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் சீதாவின் தொலைபேசியின் மூலம் அவரது உறவினர் அழைத்து மதுரை வர வற்புறுத்தி உள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் மீண்டும் தங்களது உறவினர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தினால் நேற்று இரவு இருவரும் விஷம் அருந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் .

இன்று காலை வீடு திறக்கப்படாமல் இருந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக கிடப்பது தெரிய வந்தது.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வீட்டில் இவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதில் தாங்கள் இருவரும் விருப்பப்படி வாழ திருப்பூர் வந்த நிலையில் எங்களின் இந்த முடிவுக்கு சில பேர் காரணம் எனவும் 100 வருடம் வாழ விருப்பப்பட்டதாகவும் வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுத்திருப்பதாக கடிதம் எழுதி வைத்திருந்தனர் இதனையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!