தேர்தல் முடிவுக்கு பிறகு திமுகவுக்கு குட்-பை… வைகோவின் திட்டமே இதுதான் ; துரைசாமி சொன்ன தகவல்!!

Author: Babu Lakshmanan
4 May 2024, 2:48 pm

திருப்பூர் பிராசஸர் வீதியில் உள்ள எல்.பி.எப் தொழிற்சங்க அலுவலகத்தில் மதிமுகவின் முன்னாள் அவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எல்பிஎஃப் தொழிற்சங்கத்தின் மூத்த தலைவருமான சு.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மதிமுகவின் 31வது ஆண்டு விழா வருகின்ற 6ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதாகவும், ஆனால் எந்த நோக்கத்திற்காக கட்சி தொடங்கப்பட்டதோ அது மாறி தற்போது குடும்ப கட்சியாக நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

2019 மற்றும் 2021 தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, தற்போது தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பிய அவர், வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் திமுகவிலிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்… கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் திமுக அரசு ; இபிஎஸ் குற்றச்சாட்டு..!!!

தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசிய அவர், மிகவும் மோசமான முறையில் பாஜக நடந்து கொள்வதாகவும், சர்வதிகார நிலைக்கு நாட்டை கொண்டு வர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியானாலும், பாரதிய ஜனதா கட்சியானாலும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சி குறித்து தெரிவிக்கவில்லை எனவும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யார் அருதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும் மாநில சுயாட்சி பறிக்கப்படும் எனவும், எனவே கூட்டணி கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் தான் மாநில சுயாட்சி பாதுகாக்கப்படும் எனவும், நாட்டிற்கு அதுவே நல்லது எனவும், இல்லை என்றால் எதேச்சதிகார போக்கு தொடரும் எனவும் தெரிவித்தார்.

வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, தற்போது குடும்ப கட்சியாக நடத்தி வரும் நிலையில், மீண்டும் திமுக உடன் இணைத்துக் கொள்ள வலியுறுத்தி கட்சியில் இருந்தபோதும், வெளிவந்த பிறகும் வைகோவிற்கு ஏழு முறை கடிதம் அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் இல்லை, எனவும் தெரிவித்தார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 242

    0

    0