ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளி விற்பனை… கிடுகிடு விலை உயர்வால் திருப்பூர் விவசாயிக்கு அடித்த யோகம்…!!

Author: Babu Lakshmanan
2 August 2023, 11:41 am

திருப்பூரில் ஒரே நாளில் நான்கு லட்சம் ரூபாய்க்கு தக்காளி விற்று விவசாயி ஒருவர் வருவாய் ஈட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்த ஜோதியம்பட்டி சேர்ந்தவர் விவசாயி வெங்கடேஷ். 27 வயதான இவர் தனக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தக்காளி விவசாயம் செய்து வருகிறார்.

விலை ஏற்ற இறக்கம் உள்ள நிலையில், இந்த ஆண்டுதான் தனக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளதாகவும், இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 900 கிலோ தக்காளி அறுவடை செய்து கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார். மொத்தம் 260 பெட்டிகளில் 15 கிலோ வீதம் கொண்டு வந்த நிலையில், ஒரு பெட்டி 1550 ரூபாய்க்கு விற்பனையானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 4 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் வருவாயை ஒரே நாளில் ஈட்டினார். விவசாயியான தங்களாலும் வருமானம் ஈட்ட முடியும் எனவும், இந்த ஆண்டு தனக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக உள்ளதாக தெரிவித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி