‘அண்ணா, போங்கண்ணா’… கஞ்சா போதையில் இளைஞர்கள் அடாவடி… கெஞ்சிய பெண்கள் ; அதிர்ச்சி வீடியோ காட்சி..!!!

Author: Babu Lakshmanan
19 July 2023, 5:45 pm

திருப்பூர் அருகே, கஞ்சா ஆசாமிகள் பெண்ணிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. கணவர் இறந்த நிலையில், அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பாரதிபுரம் பகுதியை சேர்ந்த சின்ன சூர்யா மற்றும் பெரிய சூர்யா என்ற இருவரும் அப்பகுதியில் உள்ள கடைகளில் மாமுல் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கஞ்சா போதையில் கிருஷ்ணவேணி கடைக்கு சென்ற சின்ன சூர்யா மற்றும் பெரிய சூர்யா இருவரும் பணம் கேட்டுள்ளனர். கிருஷ்ணவேணி பணம் தர மறுத்தாகவும், இதில் ஆத்திரமடைந்த இருவரும் கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் பேசி, கடையில் இருந்த பாட்டில்களை உடைத்தும், கிருஷ்ணவேணியை கீழே தள்ளியும் தகராறில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கஞ்சா போதையில் மாமூல் கேட்டு பெண்ணிடம் தகராறில் ஈடுபடும் வீடியோவானது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, மங்கலம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?