திருப்பூர் – கரூர்… கொங்கு மண்டலத்தில் போதை மாத்திரைகள் சப்ளை படுஜோர் : வலையில் சிக்கிய கும்பல்!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2024, 2:15 pm

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் 2 இளைஞர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக வெங்கமேடு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அங்கு இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த வெங்கமேடு திருப்பூர் குமரன் தெருவை சார்ந்த சூர்யா (வயசு 24), மாண்டா என்கின்ற மாண்டா மனோஜ் (வயது 24) ஆகியோரை பிடித்து சோதனை செய்ததில் திருப்பூரிலிருந்து போதை மாத்திரிகைகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருவதை ஒப்புக் கொண்டனர்.

அவர்களிடமிருந்து Tabentala dol tablets என்ற போதை மாத்திரிகைகள் 33 யையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், இளைஞர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

  • Meenakshi Chaudhry மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?