ஆக்கிரமிப்பு மீட்கச் சென்ற அதிகாரிகள்: அதிகாரிகளை மிரள விட்ட பெண்: பெட்ரோல் கேனுடன் பண்ணிய அலப்பறை….!!

Author: Sudha
17 August 2024, 2:09 pm

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சியில், கௌதம் ராஜ் என்பவர் 1.59 ஏக்கர் நிலத்தை  வாங்கியுள்ளார்.

அந்த நிலத்திற்கு செல்லும் 12 அடி  பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அந்தப் பாதையை மீட்டுத் தரும்படி கோட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனடிப்படையில், வட்டாட்சியர் பானுமதி தலைமையில், போலீசார் பாதுகாப்புடன் மீட்புப் பணி நடைபெற்றது. அப்போது வீரக்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கம்பி வேலி போடப்பட்டிருந்தது. வீரக்குமார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவர் வரும் வரை அளவீடு செய்யக்கூடாதெனவும் அவரது உறவினர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது  பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த உறவினர் கனகராஜை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். மேலும் பூச்சி மருந்தை அருந்த முயன்ற செல்வராணியையும்  போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனிடையே டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, ஜேசிபி இயந்திரம் மூலம் பாதையை மீட்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து வீரக்குமார் நிலத்தை  அளவீடு செய்ய அவர்கள் நிபந்தனையின் படி 5 நாள் அவகாசம் வழங்கப்பட்டது.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!