துணி காயப்போடச் சென்ற போது பறிபோன உயிர்… நண்பனின் அலறலைக் கேட்டு உதவிக்கு போனவருக்கு நேர்ந்த கதி ; திருப்பூரில் சோகம்!!
Author: Babu Lakshmanan10 April 2023, 8:42 pm
திருப்பூர் அருகே முதலிபாளையம் பகுதியில் வீட்டில் தங்கி இருந்த இரண்டு வட மாநில தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் கிராமம் உட்பட்ட சிட்கோ செந்தில் நகர் பகுதியில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்த்த கமலேஷ் (24) சச்சின் ராம்.(22) ஆகிய இருவரும் நண்பர்கள் வாடகைக்கு வீட்டில் வசித்து கொண்டு, இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
வட மாநில தொழிலாளியான இவர்கள் கமலேஷ் என்பவர் தனது ஈரதுணி காய வைப்பதற்காக அருகிலுள்ள கம்பியின் மீது துணியை போட்டுள்ளர். அதில் மின்சாரம் இருந்ததால் எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த நண்பர் சச்சின் ராம் என்பவர் மின்சாரம் தாக்கிய நண்பரை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
இருவரது அலறல் சத்தம் கேட்டதை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி உயிர் இழந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.