திருப்பூரில் பயங்கரம்… கோவில் பின்புறம் எரிந்த நிலையில் சடலம் ; சாப்பாடு கொடுக்க வந்த பூசாரியின் மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Author: Babu Lakshmanan
17 December 2022, 6:59 pm

திருப்பூர் அருகே கோவில் பூசாரி தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (72). இவரது மனைவி பார்வதி (65). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். சுப்பிரமணி அப்பகுதியில் உள்ள கோவிலிலேயே தங்கி பூசாரியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை இவரது மகள் சுப்பிரமணி தங்கியிருந்த அறைக்கு உணவு கொடுக்க வந்த போது, அறை முழுவதும் ரத்தமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர், கோவிலின் பின்புறம் சென்று பார்த்துள்ளார். அங்கு சுப்பிரமணி எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, முன்விரோதம் காரணமாக சுப்பிரமணி கொலை செய்யப்பட்டாரா..? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 888

    0

    0