மிக்சர் நிறுவனத்தில் 25 வயது இளைஞர் சுத்தியால் அடித்துக்கொலை… சக தொழிலாளிக்கு வலைவீச்சு…. போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
13 November 2023, 4:40 pm

திருவள்ளூர் ; செங்குன்றம் அருகே மிக்சர் கம்பெனியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சுத்தியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட நொறுக்கு தீனி தயாரிக்கும் தயாரிக்கும் சிறு சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தனியார் நிறுவனத்தில் நேற்றிரவு தலையில் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவரது சடலம் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சடலத்தை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு சென்றுவிட்டதாகவும், தென்காசியை சேர்ந்த ஐயப்பன் என்ற தொழிலாளி தங்கியிருந்தது தெரிய வந்ததுள்ளது.

முதற்கட்டமாக ஐயப்பன் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் கூறிய அடையாளங்கள் சடலத்தில் இல்லாததால் இறந்தவர் ஐயப்பன் இல்லை எனவும், ஐயப்பன் தலைமறைவானது தெரிய வந்தது. ஐயப்பன் பிடிபட்ட பிறகே கொலை செய்யப்பட்டது யார், கொலை செய்தது யார், காரணம் என்ன என்பது தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நாளில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா அல்லது முன் பகையால் திட்டமிட்டு கொலை நடந்ததா எனவும் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Actress Sneha has a rare disease.. Prasanna praises her courage! நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!