வங்கியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து… பெண் வாடிக்கையாளருக்கு படுகாயம்… மருத்துவமனையில் அனுமதி
Author: Babu Lakshmanan14 March 2024, 5:57 pm
திருவள்ளூர் அருகே இந்தியன் வங்கி மேற்கூரை விழுந்து வாடிக்கையாளர் பெண் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் அடுத்த மப்பேடு பகுதியில் பிரபல இந்தியன் வங்கி வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் இன்று இந்தியன் வங்கி கிளைக்கு வந்த போது, வாடிக்கையாளர் அமரும் பகுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மப்பேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரபல வங்கி கிளையில் மேற்கூரை இடிந்து விழுந்து வாடிக்கையாளர் ஒருவர் காயமடைந்துள்ள சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.