பொழுதை கழிக்கச் சென்ற நண்பர்கள்… கொசஸ்தலை ஆற்றில் கேட்ட அலறல் சத்தம் ; போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
3 May 2023, 9:52 pm

திருவள்ளூர் ; கொசஸ்தலையாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே நெற்குன்றம் எருக்கஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் விஷ்ணுகுமார் (20). இவர் மதுரவாயல் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், கொசஸ்த்தலையாற்றில் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து குளித்த போது ஆழமான பகுதியில் நீரில் மூழ்கினார்.

இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு அவரை காப்பாற்ற முயன்றும் மூழ்கி உயிர் இழந்தார். அவரது உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சோழவரம் போலீசார், கல்லூரி மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்