கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த திமுக நிர்வாகி.. வாட்ஸ்அப்பில் பரவிய ஆபாச வீடியோ.. பின்னணியில் முன்னாள் காதலன்.. விசாரணையில் பகீர்!!

Author: Babu Lakshmanan
21 December 2022, 12:59 pm

திருவள்ளூர் ; முன்னாள் காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலி மிரட்டியதால் திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருள்ளூர் மாவட்டம் பொன்னேரி திமுக இளைஞர் அணி அமைப்பாளர் திவாகரன். இவருக்கு திருமணமாகி ரஞ்சனி என்கிற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர் தடப்பெரும்பாக்கம் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் வாஷிங் மெஷின் மற்றும் குளிர்சாதன பெட்டி பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

கடை அருகிலேயே பணிசெய்யும் முனி ரத்னா (22) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில், திவாகரன் அவரது வீட்டை விற்று பணம் வைத்திருந்ததை அறிந்த முனி ரத்னாவின் முன்னாள் காதலனான கோயம்பத்தூரை சேர்ந்த பிரகாஷ், முனிரத்னாவின் செல்போனை பிடுங்கி சென்றுள்ளார்.

அதில், திவாகர் முனிரத்னா உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோவை பார்த்து, திவாகரனை 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதனை தர மறுத்ததால் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்தும், சமூக வலைதளங்களிலும் பரப்பியுள்ளார்.

இதையடுத்து, முனிரத்னா மற்றும் அவரது தாய் உள்ளிட்டோர் முனிரத்தினாவை திருமணம் செய்து கொள்ளவும் திவாகரை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில், மனம் உலைச்சலில் இருந்த திவாகர் தான் வாடகை எடுத்து தங்கியிருந்த வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், 10 லட்சம் பணம் கேட்டு டார்ச்சர் கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளக்காதலன் பிரகாஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலி முனிரத்னா தாய் சுகுணா, அக்கா வாணி, உறவினர் விமல் ராஜ் உள்ளிட்டோர் மீது இறந்து போன, திமுக இளைஞர் அணி அமைப்பாளர் திவாகரின் மனைவி ரஞ்சனி பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், காவல் ஆய்வாளர் நிர்மலா வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அனைவரையும் தேடி வருகின்றனர். அவர்களை கைது செய்தால் மட்டுமே திமுக இளைஞரணி அமைப்பாளர் தற்கொலை வழக்கில் உண்மை விவரங்கள் மேலும் பல வெளியே வரும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 490

    0

    0