இரும்புக் கம்பியால் அடித்து பெண் கொலை ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயம்.. கஞ்சா போதையில் திமுக பிரமுகரின் மகன் வெறிச் செயல்..!!

Author: Babu Lakshmanan
2 January 2023, 9:34 am

திருவள்ளூர் அருகே திமுக ஒன்றிய கழக செயலாளர் மகன் கஞ்சா மது போதையில்
இரும்பு கம்பியால் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகை பேர் கிராமத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய கழகச் செயலாளரான சக்திவேல். இவரது மகன் விஷால் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் காரணமாக கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அருகில் உள்ள அவரது பெரியப்பா மறைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திராவிட பாலு என்பவர் வீட்டில் அவரது மனைவி செல்வி, மகன் முருகன், மருமகள் ரம்யா, பேரன் கருணாநிதி ஆகியோருடன் இருந்தபோது, ஏற்கனவே இருந்த குடும்ப பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இரும்பு கம்பியை கொண்டு நால்வரையும் விஷால் தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில், ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இரத்த வெள்ளத்தில் இருந்த மூவரையும் பொதுமக்கள் மீட்டு வேல்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இரும்பு கம்பியால் தாக்கி ரம்யாவை கொன்றுவிட்டு தப்பியோடிய தனியார் கல்லூரி மாணவன் திமுக ஒன்றிய கழக செயலாளர் மகனை பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 492

    0

    0