‘வாம்மா… வாம்மா.. கையெழுத்து போடு’… கூவி கூவி நீட் தேர்வுக்கு எதிராக மாணவிகளிடம் கையெழுத்து வாங்கும் திமுகவினர்…!!
Author: Babu Lakshmanan8 November 2023, 12:06 pm
திருவள்ளூர் : பொன்னேரியில் நீட்தேர்வுக்கு எதிராக விலக்கு அளிக்க வேண்டி மாணவ, மாணவிகளிடம் திமுகவினர் கேட்டு கேட்டு கையெழுத்து பெற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசினர் உலகநாத நாராயணசாமி கல்லூரி மற்றும் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று திமுக சார்பில் நீட்டிற்கு எதிராக விலக்கு அளிக்க வேண்டி கையெழுத்து இயக்கம் கடிதம் பெரும் நிகழ்வு நடைபெற்றது.
பெரும்பாலான பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதன் மூலம் 50 லட்சம் கடிதங்களை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக இந்த கையெழுத்து இயக்கம் திமுக கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு வேண்டுமா..? வேண்டாமா ? கையெழுத்து போடுங்கள் என கூவி கூவி வாம்மா வாம்மா வாப்பா என அழைத்து திமுகவினர் கையெழுத்து வாங்கினர்.
அப்போது, இந்த நிகழ்ச்சி நடைபெறும் போது, பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர், நான் நீட் தேர்வு எழுதுவேன். எனக்கு நீட் வேண்டும் என்று தைரியமாக கூறியது திமுக கட்சியினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.