கொலையில் முடிந்த வாய்த்தகராறு.. தம்பியை லாரி ஏற்றிக் கொன்ற அண்ணன் கைது ; மதுபோதையில் வெறிச்செயல்!!

Author: Babu Lakshmanan
10 January 2023, 5:41 pm

திருவள்ளூர் அருகே போதையில் தம்பியை லாரியை ஏற்றி கொலை செய்த வழக்கில் அண்ணன் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் 21 ம் தேதி புழல் அம்பத்தூர் சாலையில் தனியார் பள்ளி அருகே வட மாநில லாரி ஒன்று சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதில் இரண்டு ஓட்டுனர்கள் இருந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால், ஆத்திரப்பட்ட மற்றொரு ஓட்டுநர் திடீரென லாரியை இயக்கி முன்னாள் நின்று கொண்டிருந்த மற்றொரு டிரைவரின் மீது லாரியை ஏற்றினார். இதில் சம்பவ இடத்திலேயே, அவர் உடல் நசுங்கி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, இறந்த லாரி ஓட்டுனர் புது வண்ணாரப்பேட்டை தேசிய நகர் 2வது தெருவை சேர்ந்த சேர்ந்த சீனிவாசன் (50) என்பவரின் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியை ஏற்றி கொலை செய்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த வழக்கில் கொலையாளியை உடனே பிடிக்க கொளத்தூர் துணை ஆணையாளர் ராஜாராம் குற்றவாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில், இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், புழல் பகுதியில் சுற்றி திரிந்த திருச்சி, திருவெறும்பூர் காட்டூரை சேர்ந்த லாரி ஓட்டுனர் பிச்சையப்பா (58) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், லாரி ஏற்றி கொல்லப்பட்ட சீனிவாசன் தம்பி என்பதும், இருவரும் மதுபோதையில் இருந்த‌போது வாய்த்தகராறு ஏற்பட்டதில், கொலையில் முடிந்ததாக தெரியவந்தது. பின்னர், பிச்சையப்பாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • surya 45 movie villan role act in rj balaji ரசிகர்களுக்கு பயங்கர ட்விஸ்ட் கொடுத்த ஆர் ஜே பாலாஜி…சூர்யா45-ல் வில்லனாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்..!
  • Views: - 386

    0

    0