கள்ளக்காதலனுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலன் வெட்டிக் கொலை ; பெண் கைது.. 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

Author: Babu Lakshmanan
14 December 2023, 4:42 pm

கள்ளக்காதலுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த கோபி (27) என்ற இளைஞருக்கும், சிவன் கோவில் தெருவை சேர்ந்த திருமணம் ஆன பிரியா என்கிற பெண்ணுக்கும் முறை தவறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரியாவிற்கு ஆனந்த் என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது.

இதனால், கோபிக்கும், பிரியாவிற்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிரியா கள்ளக்காதலன் ஆனந்த் மற்றும் கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்து திருஆயர்பாடியில் கோபியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே விழுந்தார்.

இதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், பிரியாவை கைது செய்து அவரது கள்ளக்காதலன் சென்னையைச் சேர்ந்த ஆனந்த், அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட நான்கு பேரை அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் கள்ளக்காதலுடன் சேர்ந்து பெண் முன்னாள் கள்ள காதலனை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 482

    0

    0