ரயில் நிலையத்தில் நரிக்குறவ இளைஞர் கழுத்து அறுத்து கொலை… நண்பனின் வெறிச்செயல் ; நள்ளிரவில் நடந்த சம்பவம்

Author: Babu Lakshmanan
22 November 2023, 2:44 pm

திருவள்ளூர் அருகே புட்லூர் ரயில்வே ஸ்டேஷனில் நரிக்குறவ இளைஞர் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் அருகில் வசித்துக் கொண்டு வருபவர் கார்த்திக். இவர் தினந்தோறும் ஊசிமணி பாசியை ரயில் வண்டியில் விற்பனை செய்து, அதன் மூலம் தன்னுடைய குடும்பத்தை நடத்தி வந்தார். இவருடன் நண்பர் தமிழரசன் என்பவர் கடந்த இரண்டு நாட்களாக சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், புட்லூர் ரயில் நிலையத்தில் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த நபர் மீது மின்சார ரயிலில் வந்த தமிழரசன் என்பவர் கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு கழுத்தில் குத்தி விட்டு, அதை மின்சார ரயில் தப்பி சென்றார். இதைப்பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர், கத்தி குத்து உடன் ரத்த வெள்ளத்தில் இருந்த நபர் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், கொண்டு செல்லும் வழியிலே அவர் உயிர் பிரிந்தது.

குத்திய நபர் யார் என்றும், எதற்காக இவரை குத்தி விட்டு தப்பி சென்றார் என்பது குறித்தும் ரயில்வே காவலர்கள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 385

    0

    0