பள்ளி மாணவனுக்கு மலர்ந்த காதல்… இரு பள்ளி மாணவிகளின் இடையே கோஷ்டி மோதல் ; கலவர பூமியான பேருந்து நிலையம்…!!
Author: Babu Lakshmanan15 September 2023, 2:24 pm
இரு அரசு பள்ளி மாணவிகள் இடையே காதல் விவகாரத்தால் மோதல் ஏற்பட்டதால் திருவள்ளூர் பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மையப் பகுதியில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும் அரசு உதவி பெறும் கெளடி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கௌடி பள்ளியில் படிக்கும் மாணவின் ஒருவரின் தம்பியை ஆர்.எம்.ஜெயின் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் காதலிப்பதை கூறப்படுகிறது.
இதை அறிந்த அந்த மாணவி தனது தம்பியை காதலிப்பதை நிறுத்தக்கோரி மாணவியை சந்தித்து அவர் கண்டித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவி சக தோழிகளுடன் இணைந்து நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தில் தாக்கியுள்ளார். இதனால், மீண்டும் இன்று மாலை பள்ளி முடிந்தவுடன் பேருந்து நிலையத்திற்கு காத்திருந்த இரு பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
ஏற்கனவே, ஆர்.எம் ஜெயின் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மத்தியில் போதைப் பழக்கம் இருப்பதாக புகார் வந்த நிலையில், இன்று அதே பள்ளியைச் சேர்ந்த மாணவிகள், மற்றொரு பள்ளி சேர்ந்த மாணவிகளுடன் பொது இடத்தில் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.