குடிக்கு அடிமையான கணவன்… கள்ளக்காதலில் விழுந்த மனைவி… காட்டுப்பகுதியில் போட்ட ஸ்கெட்ச் ; போலீசார் விசாரணையில் அம்பலம்..!!

Author: Babu Lakshmanan
8 January 2024, 6:54 pm

திருவள்ளூர் அருகே குடிக்கு அடிமையான கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்து மனைவி தீர்த்து கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பென்னாலூர் பேட்டை மேட்டுகாலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (43). இவருக்கு மனைவி நந்தினி (29) என்ற மனைவி உள்ளார். கடந்த 3ம் தேதி வள்ளுவர் நகர் மேல்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சீனிவாசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் பார்த்து உடனடியாக பென்னலூர் பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த சீனிவாசனின் மனைவி நந்தினிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. குடிக்கு அடிமையான சீனிவாசன் நந்தினியின் கள்ளக்காதலன் குமரனிடம் மது வாங்கி கொடுக்கும் படி கேட்டுள்ளதாக தெரிகிறது. குமரன் மது வாங்கிக் கொண்டு வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சீனிவாசனை வர வைத்து அவரது மனைவி நந்தினியையும் அங்கு வர வைத்துள்ளார்.

பின்னர், சீனிவாசனுக்கு மது ஊற்றி கொடுத்து போதை தலைக்கு ஏறியதால், சீனிவாசனுக்கும் குமரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில்,சீனிவாசனின் மனைவி நந்தினி மற்றும் கள்ளக்காதலன் குமரன் ஆகிய இருவரும் சேர்ந்து சீனிவாசனை நந்தினி அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தில் போட்டு நெரித்து தீர்த்து கட்டியுள்ளனர்.

இந்நிலையில் தனது கணவர் மர்மமான முறையில் இருந்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உடலை அடக்கம் செய்த நிலையில், காவல்துறையினரும், மர்மமான முறையில் இறந்ததாக கூறி வழக்கை பதிவு செய்தனர். உடற்கூறாய்வில் கழுத்து பகுதி இருக்கப்பட்டு இறந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியே கணவனை தீர்த்துக் கட்டிய சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே மனைவி நந்தினி அவரது கள்ளக்காதலன் குமரனை கைது செய்த போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். குடிக்கு அடிமையான கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியே தீர்த்து கட்டிய சம்பவம் பென்னலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 447

    0

    0