பர்த்-டேக்கு இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டதால் ஆத்திரம்… தலையை வெட்டி நண்பனின் சமாதியில் வைத்த கொடூரம் ; 6 பேர் கைது

Author: Babu Lakshmanan
30 April 2024, 7:07 pm

மீஞ்சூரில் தலையை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் ஆறு பேர் கைது மேலும்தலைமறைவான மேலும் ஒருவரை தனிப்படை. போலீசார் தேடி வருகின்றனர்

திருவள்ளூர் மாவட்டம் வஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் நாகராஜ். அவரது மகன் அஸ்வின் குமார் வயது (21). மீஞ்சூர் பகுதியில் கை, கால், தலை வெட்டப்பட்டு வெறும் உடல் மட்டும் தலை இல்லாமல் இருப்பதை மீஞ்சூர் போலீசார் கைப்பற்றினர். மேலும், தலையை வெட்டி கொலை செய்த கும்பல் பெருங்காவூர் சுடுகாட்டுப் பகுதியில் அஜய்குமார் என்கிறவரின் சமாதியில் தலையை வைத்து விட்டு சென்றுள்ளது.

மேலும் படிக்க: ஐயோ, வேண்டவே வேண்டாம்… ஜுன் 1ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலா..? ராமதாஸ் சொல்லும் புது காரணம்…!!!

சுடுகாட்டுப் பகுதியில் தலை மட்டும் இருப்பதை மீட்டு சோழவரம் போலீசார் நடத்திய விசாரணையில், மீஞ்சூரில் கொலை செய்யப்பட்ட அஸ்வின்குமார் தலை என்பதும் தெரியவந்ததை தொடர்ந்து, வழுதிகை மேடு பகுதியை சேர்ந்த அஜீத் என்கிற அவுஜா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும்,
கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், தலைமறைவான ஆசான புதூர் கிராமத்தைச் சேர்ந்த அஜய் வீட்டினை தீயிட்டு சிலர் எரித்து சென்றுள்ளனர். கொலை செய்யப்பட்டு உயிரிழந்த அஸ்வின் குமாரின் தம்பி சஞ்சய் குமார் உள்ளிட்ட இருவரை சந்தேகத்தின் பேரில், போலீசார் வீட்டை எரித்ததாக கூறி கைது செய்து பொன்னேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமறைவான அஜய் மெதூர் கிராமத்தில் மவுத்தம்பேடு பகுதியைச் சேர்ந்த ராகேஷ் என்பவரின் தலையை வெட்டி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜாமினில் வெளிவந்துள்ளார். தற்போது அஸ்வின் குமாரின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கிலும் அவரை அழைத்து வந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வழுதிகைமேடு கிராமத்தைச் சார்ந்த அவுஜா என்கிற அஜித்குமாரின் உறவினர் மகள் அபி என்பவரை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், அஸ்வின் குமார் தன்னை கடத்திச் செல்வதாக அபி தெரிவித்ததால், அஸ்வின் குமாரை பட்டமந்திரி பகுதியில் பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் கோபமடைந்து அவரை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், இன்ஸ்டாவில் காதல் கொண்ட பிரியா என்பவரை அஸ்வின் குமார் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், அவரை ஏழு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது

செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெரு அருகே கஞ்சா விற்பனையில், இரு தரப்பினருக்கும் நடந்த முன் விரோத காரணமாக பெருங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (20) விஜய் (26) ஆகிய இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். படுகாயம் அடைந்த அஜய் என்கிற அஜித் குமார் (27) சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

கொலை சம்பவத்தில் முக்கிய நபரான அஜித்குமார், டில்லி நரேஷ், மணிகண்டன், ஶ்ரீகாந்த் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மூவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அஜித்குமார் அடைக்கப்பட்டிருந்த நிலையில், முதன்மை கொலையாளியான அஜித்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, பாராட்டி இன்ஸ்ட்டாவில் ரீல் செய்து,
அதனை அஸ்வின் குமார் வெளியிட்டுள்ளார்.

இதனை அறிந்த கொலை செய்யப்பட்டு உயிரிழந்த அஜய்குமார் நண்பரான வழுதி கை மேடு பகுதியைச் சேர்ந்த அவுஜா என்கிற அஜித், தனது உறவு பெண்ணை காதலித்து ஏமாற்றிய வஞ்சிவாக்கம் அஸ்வின் குமார் தனது நண்பரை கொலை செய்த கொலையாளிக்கு வாழ்த்து தெரிவித்து ரீல் செய்ததையும் கண்டு ஆத்திரம் அடைந்து, அவரது கூட்டாளிகளை ஏவி மீஞ்சூர் பகுதியில் அவரை வெட்டி கொலை செய்து தலையைத் துண்டித்து, தனது நண்பன் சமாதியில் வைத்துவிட்டு அனைவரும் தப்பிச் சென்றனர்.

அவுஜா என்கிற அஜித், ஜெயக்குமார், கார்த்தி, மனோ, தேவா, மோகன் ஆகியோரை கைது செய்ததுடன், சோழவரம், மீஞ்சூர், பொன்னேரி போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் கொலை கொலை சம்பவம் தொடர்பாக அனைவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு, கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீஞ்சூர் போலீசார் சிறையில் அடைத்தனர். தலைமறைவான அஜய்யை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள அனைவர் மீதும் கொலை கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 482

    0

    0