திருவள்ளுவர் தினத்தன்றும் ஓயாத மதுவிற்பனை… சமூக நல ஆர்வலரின் செயலால் வாயடைத்து போன போலீஸ்.. டாஸ்மாக் முன்பு நடந்த சம்பவம்!!
Author: Babu Lakshmanan16 ஜனவரி 2024, 5:38 மணி
கரூர் அருகே திருவள்ளுவர் தினத்தன்று சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததை சமூக ஆர்வலர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உலகப்பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய ஐயன் திருவள்ளுவர் பிறந்த தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், அவரது பிறந்த நாளில் மதுக்கடைகளையும், மதுபான கடைகளையும் பூட்டி, அதற்கு அரசு விடுமுறை அறிவித்து கடைபிடித்து வருகின்றது.
இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகளின் மூலம் இயங்கும் மதுபானபார்கள் சட்டவிரோதமாக இயங்கிய நிலையில், அதனை கண்டித்து சமூக நல ஆர்வலர், வழக்கறிஞர் ராஜா குரல் கொடுத்து அதனை தட்டியும் கேட்டுள்ளார்.
கரூர் மாநகர பழைய பேருந்து நிலையத்தின் முன்பு அரங்கேறிய இந்த 24 மணி நேர சட்டவிரோத மதுபானக்கூடம் 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும், காவல்துறை கண்டும் காணாமல் விட்டு விடுவதாகவும், இன்று திருவள்ளுவர் தினத்தினை முன்னிட்டும் இயங்கி வருவதாகவும், அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், உடனே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறும், வெளியூர்களிலிருந்து வந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து கொண்டிருந்த நிலையில், அந்த சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபானகூடத்தினை, அதில் பணியாற்றும் ஊழியர்கள் பூட்டிய காட்சியும், அந்த மதுபானக்கூடத்தில் மது அருந்த சென்றவர்கள் மற்றும் மதுபானக்கடைகளில் பணியாற்றி வருபவர்களையும் உள்ளேயே மூடிக்கொண்டனர்.
இந்த நிலையில், தகவலறிந்த காவல்துறையினர் உடனே பாருக்குள் நுழைய முற்பட்டு சோதனை நடத்தும் தருவாயில் உடனே உள்புறமாக தாழிட்டு கொண்டனர். போலீஸார் நீண்ட நேரமாக காத்திருந்து வழக்கு பதிவு செய்ய துடித்த காட்சிகளும் நகைச்சுவையினை ஏற்படுத்தி வந்தன.
0
0