திருக்கார்த்திகை தீப மகாரத தேரோட்ட திருவிழா… லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு ; விண்ணைப் பிளக்கும் அரோகரா கோஷம்!!

Author: Babu Lakshmanan
23 November 2023, 3:54 pm

திருக்கார்த்திகை தீப மகாரத தேரோட்ட திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

நினைத்தாலே முக்தி தரும் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக உள்ள திருவண்ணாமலையில் கடந்த 17ஆம் தேதி முதல் திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியோற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருக்கார்த்திகை தீப திருவிழாவின் 7ஆம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அதிகாலையில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, பின்னர் விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் உடனூறை அண்ணாமலையார், பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஷ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் மகாரத தேரினில் எழுந்தருளினர்.

பின்னர் காலை 7.45 மணியளிவில் விநாயகர் தேரோட்டம் துவங்கியது. விநாயகர் தேர் நிலையை வந்தடைந்த பின்னர் முருகர் தேர்ரோட்டம் துவங்கியது. பக்தகள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் முருகர் தேரினை வடம் பிடித்து மாடவீதிகளில் வலம் வந்தனர்.

மதியம் 3 மணியளவில் அண்ணாமலையாரின் மஹாரத தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர் மகா ரதத்தை வடம் பிடித்து இழுப்பார்கள். மஹா ரத தேரோட்டத்தையொட்டி 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!