‘பணத்தை கேட்டால் புடவையை புடுச்சு இழுக்கிறான்’… சீட்டு நடத்தி லட்சங்களை சுருட்டிய விஜய் கட்சி நிர்வாகி அடாவடி..!!

Author: Babu Lakshmanan
6 May 2024, 9:08 pm

திருவண்ணாமலையில் சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக விஜய் கட்சி நிர்வாகியின் வீட்டை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

திருவண்ணாமலையில் விஜய் கட்சி நிர்வாகி முருகன் என்பவர் சீட்டு நடத்தி வந்துள்ளார். 6 ஆண்டுகளாக அப்பகுதியில் சீட்டு நடத்தி வந்துள்ளார். சீட்டுக்கான தவணை காலம் முடிந்த நிலையில், பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

மேலும் படிக்க: ‘என்ன கேள்வி இது! கிளி ஜோசியம் பாக்குற மாதிரி’ – செய்தியாளர்கள் கேள்வி… சீறிய சீமான்!!

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முருகனின் வீட்டை பத்துக்கும் மேற்பட்ட பூட்டுகளைக் கொண்டு பூட்டு போட்டனர்.

அப்போது, பேசிய அவர்கள், ஆண்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பி கொடுத்த விட்ட நிலையில், பெண்களுக்கு மட்டும் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் கொடுத்தும், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், பணம் கேட்டுச் சென்றால், பணம் எல்லாம் தர முடியாது என்றும், உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை போலீசாருக்கு கொடுத்தால், ஈஸியாக வெளியே வந்துவிடுவேன் என்று திமிராக பேசுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 557

    0

    0