‘ஆட்டம் போட நேரம் வந்தாச்சி… அன்பக் குடுக்க… ஆளு கெடச்சாச்சி’… அனல் பறக்க குத்தாட்டம் போட்ட மணப்பெண் ; வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
9 June 2023, 10:32 am

திருவாரூரில் பரிச விழாவில் அனல் பறக்க குத்தாட்டம் போட்ட மணப்பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட எழிலூர் மேலத்தெரு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் இளமதி தம்பதியினரின் மகள் பெர்சியா என்கிற ஷீலாவிற்கும், நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்திற்குட்பட்ட பெரியத்தும்பூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த மதியழகன் லதா தம்பதியினரின் மகன் சதீஷ்குமாருக்கும், பெரியத்தும்பூர் சிங்க மகா காளியம்மன் கோவிலில் திருமணம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், அதற்கு முன்பாக திருத்துறைப்பூண்டியில் உள்ள லூர்து மஹாலில் மணமகள் வீட்டின் சார்பில் பரிசவிழா நடைபெற்றது.இதில் நண்பர்கள் புடை சூழ எம்.காம் பட்டதாரியான மணமகள் பெர்சியா என்கிற ஷீலா, அனல் பறக்க குத்தாட்டம் போட்டார். மாலையும் கழுத்துமாக உற்சாகத்துடன் அவர் நடனமாடியதை பார்த்த நண்பர்கள், உறவினர்கள் விசில் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த வீடியோ தற்போது மணமகளின் நண்பர்களால் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீப காலங்களில் மேல் தட்டு மக்களின் திருமண நிகழ்வுகளில் மணமகன் மணமகள் நடனம் ஆடுவது என்பது இயல்பாக நடந்து வருகிறது.

தற்போது இந்த கலாச்சாரம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கும் தொற்றிக் கொண்டது என்று சொன்னால் மிகையாகாது. திருமண நிகழ்வுகள் நிச்சயதார்த்த நிகழ்வுகளில் உற்சாக மிகுதியில் குத்தாட்டம் போடும் நிகழ்வுகள் சம்பந்தபட்டவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதுடன், இது போன்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 2736

    1

    0