இரு சக்கர வாகனத்தில் சென்ற குமாஸ்தாவை கஞ்சா போதையில் வழி மறித்து தாக்கி வாகனம் மற்றும் செல்போனை பறித்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட விஜயபுரம் பாரதி தெரு பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 42) என்பவர் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை விஜயபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் நேதாஜி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நெய் விளக்கு தோப்பு என்கிற இடத்தில் வழி மறித்த மூன்று இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க: இந்த அளவுக்கு சொதப்பி பார்த்ததே இல்ல… வடிவேலு மாதிரி காமெடி பண்ணுகிறார் அண்ணாமலை ; ஜெயக்குமார் விமர்சனம்..!!!
தொடர்ந்து அந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் சரவணன் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு பேபி டாக்கீஸ் சாலை வழியாக சென்றுள்ளார். மற்ற இருவரும் அவரை அருகில் உள்ள நகராட்சி கழிவறை கட்டிடத்திற்குள் கொண்டு சென்று அங்கு அவரை தாக்கி செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சரவணன் இது குறித்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது திருவாரூர் நகரத்திற்குட்பட்ட அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த ராகவன் (வயது 19), ரஞ்சித் குமார் (வயது 18), வினோத் (வயது 23) ஆகிய மூன்று நபர்கள் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா போதையில் அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் இளைஞர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தை மட்டும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த மூன்று பேர் மீது ஏற்கனவே கஞ்சா போதையில் பொது மக்களுக்கு இடையூறு செய்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருவாரூர் நகரத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி, தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது.
எனவே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கஞ்சாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய கலந்தாய்வு வழங்கி குற்ற செயலில் ஈடுபடாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே திருவாரூர் நகர மக்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
This website uses cookies.