இதுதான் இப்ப TREND… திருமணம் முடிந்த கையோடு குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதி… வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
3 June 2023, 1:06 pm

திருவாரூர் அருகே திருமணம் முடிந்த கையோடு குத்தாட்டம் போட்ட புதுமணத் தம்பதியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த அக்கரைக்கோட்டம் பகுதியில் விஜய் மற்றும் அம்சவள்ளி ஆகியோருக்கு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற மண்டபத்தில் சினிமா பாட்டுபோட்டு திருமணத்திற்கு வந்து செல்பவர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.

அப்போது, யாரும் எதிர்பாரத வகையில் திருமணம் முடிந்த கையோடு மணவரையில் இருந்து கீழே இறங்கிய மணமகன், மணமகள் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குத்தாட்டம் போட்டு அனைவரையும் பிரமிக்கவைத்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?