தைப்பூசத்தை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்… கடும் போக்குவரத்து நெரிசல் ; வாகனங்களை அப்பறப்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர்!!

Author: Babu Lakshmanan
25 ஜனவரி 2024, 4:27 மணி
Quick Share

தைப்பூசத்தை முன்னிட்டு முறையான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்யாத காரணத்தால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் வெயிலில் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும், உலக புகழ்பெற்ற கோவிலான திருவாரூர் மாவட்டம் எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 3000ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முருகப்பெருமானை தரிசித்து சென்றனர்.

இந்நிலையில் எண்கண் கோவில் நிர்வாகம் முறையான ஏற்பாடுகளை செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக கோவில் வளாகத்தின் வெளிப்புறப் பகுதியில் பக்தர்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பது குறித்து முறையான திட்டமிடல் இல்லாமலும், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான பார்க்கிங் வசதி செய்து தராத காரணத்தினால் தங்கள் சொந்த வாகனங்களில் வருகை தந்த பொதுமக்கள் அந்தந்த வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக எண்கண் வழியாக செல்லும் ஒரே பேருந்தான கும்பகோணம் – திருவாரூர் மார்க்கத்தில் செல்லும் அரசு பேருந்து 200 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் ஆனது. இதனால் கோவிலில் சுவாமி தரிசிக்க வந்திருந்த பக்தர்கள் மட்டுமல்லாமல் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கடும் வெயிலில் கைக் குழந்தைகளுடன் பெண்களும், முதியோர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது காண்போரை வருத்தம் அடையச் செய்தது.

மேலும் உலகப் புகழ் பெற்ற எண்கண் முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் வருகை தருவர் என ஏற்கனவே கோவில் நிர்வாகத்திற்கு தெரிந்திருந்தாலும் முறையான வசதி ஏற்பாடுகளை செய்யாத கோவில் நிர்வாகத்தை பொதுமக்கள் வசைப்பாடி சென்ற சென்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு அங்கு ஒரு காவல்துறை அதிகாரிகள் கூட இல்லை என்பது வேதனையானது.

போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கியிருந்த நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மற்றும் பேருந்து நடத்துனர் இணைந்து ஒவ்வொரு வண்டியாக சாலை ஓரத்தில் நகர்த்தி போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.

குறிப்பாக அரசு பேருந்து நடத்துனர் மட்டும் 50க்கும் மேற்பட்ட இருசர வாகனங்களை நகர்த்தி போக்குவரத்தை சீர் செய்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த முறையாவது கோவில் நிர்வாகம் முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  • seeman vs vijay கேவலப்படுத்திய சீமான்… கூடிய கூட்டம் : விஜய் எடுத்த அதிரடி முடிவு..நாளை முக்கிய அறிவிப்பு!
  • Views: - 526

    0

    0