புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் டைட்டானிக்.. ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா.?
Author: Rajesh24 June 2022, 12:41 pm
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் தான் டைட்டானிக். இந்த படத்தில் ஜாக் கதாபாத்திரத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, ரோஸ் கதாபாத்திரத்தில் கேட் வின்ஸ்லெட் நடித்திருப்பார்கள். இந்த படத்தின் இயக்குனர் ஜாக்-ரோஸ் காதல் கதையை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இன்றைய தலைமுறைகளுக்கும் டைட்டானிக் படத்தை விரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
இந்த படம், விமர்சன வாயிலாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சக்கை போடு போட்டது. இதனால் பல ஆஸ்கார் விருதுகளை அள்ளி குவித்த டைட்டானிக் திரைப்படம் ரிலீஸ் ஆகி 25 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு அதன் புதுப்பிக்கப்பட்ட முப்பரிமான பதிவை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் நடந்த மிகப்பெரிய கடல் அழிவாக கருதப்பட்ட இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதில் காதல் கதையை திணித்து உருவான டைட்டானிக் திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படிப்பட்ட ரொமான்டிக் காதல் திரைப்படமான டைட்டானிக் திரைப்படத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிவு அடுத்த வருடம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்திற்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜாக் -ரோஸ் இருவரையும் டைட்டானிக் படத்தின் புதுப்பொலிவில் பார்ப்பதற்கு ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.