தமாக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்றும், எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல விழாவிற்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் GK வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழ் மாநில காங்கிரசை பொருத்தவரை தற்பொழுது யாருடனும் கூட்டணி கிடையாது. நாங்கள் மட்டுமல்ல பாமக, தேமுதிக எந்த கட்சியும் தற்போது யாருடனும் கூட்டணி கிடையாது. திமுக கூட்டணி என்று தமிழகத்தில் இருக்கிறது. அகில இந்திய அளவில் இந்தியா என்ற முரன்பாட்டுடைய மொத்த உருவத்திலே கூட்டணி இருக்கிறது. மற்ற கூட்டணிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை
நாங்கள் ஜனவரி மாதம் தான் கூட்டணி குறித்து அறிவிப்போம். தற்பொழுது நாங்கள் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் நட்பு கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். வடமாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜோசியம் சொல்ல முடியாது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்றால் சரியான வியூகம் தேவை. கட்சிகள் யார் எந்த கூட்டணியில் சேர்கிறார்கள் என்று என்னால் கணிக்க முடியாது. ஒத்த கருத்தோடு கடைபிடித்தால் எதிரியை வீழ்த்தலாம், என தெரிவித்தார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.