தேர்தலில் தோல்வி பயம்… விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தும் கட்சி ; ஜிகே வாசன் குற்றச்சாட்டு…!!

Author: Babu Lakshmanan
22 February 2024, 8:29 am

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தோல்வி பயத்திலே விவசாய பிரதிநிதிகளை, சில கட்சிகள் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி திருமண விழாவிற்கு வருகை தந்த GK வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வரும் வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தமிழ் மாநில காங்கிரசை பொருத்தவரை தேர்தல் கூட்டணி என்றால், கூட்டணி தர்மத்தை காப்பாற்றும் கட்சி கூட்டணி குறித்து ஒத்த கருத்தோடு செயல்படக்கூடிய கட்சிகளுடன் பேசுவதில் எந்த தவறும் கிடையாது.

இண்டியா கூட்டணியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்திய நாடு சட்டத்துக்கு உட்பட்ட நாடு, அனைத்து கட்சிகளும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அலுவலர்களாக இருந்தாலும் சரி, சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

விவசாயிகள் போராட்டம் ஒருபுறம் நியாயமாக இருந்தாலும், அவர்களை யாரோ ஒருவர் தூண்டி விடுகிறார்கள். இவ்வளவு காலம் தாழ்த்தி தேர்தல் அறிவிப்புக்கு பத்து நாட்களுக்கு முன்பு குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என சில கட்சிகள் தோல்வி பயத்திலே விவசாய பிரதிநிதிகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது நல்லது அல்ல, எனக் கூறினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!