சென்னை : பதவி உயர்வுக்காக செயற்கையாகவே காலி பணியிடங்களை உருவாக்கக் கூடாது என்று தமிழக தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளன்று அல்லது சில நாட்களுக்கு முன்பாக பதவி உயர்வு கிடைப்பதற்காக செயற்கையாக அந்த அலுவலகங்களில் காலிப்பணியிடம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இதன் மூலம் அந்த ஊழியருக்கு பதவி உயர்வு வருவதற்கு முன்பே பதவி உயர்வு கிடைத்து விடுகிறது.
இவ்வாறு ஓய்வு பெறும் சமயத்தில் அவர் பதவி உயர்வு பெற்றால் முழு சேவை செய்யாமலேயே அதற்கான முழு சம்பளம் உள்ளிட்ட பணப்பயனை பெற்று விடுகிறார். இவ்வாறு பல இடங்களில் பதவி உயர்வு வழங்க கோப்புகள் தயாரிக்கப்படுவதாக அரசின் கவனத்துக்கு தகவல்கள் வருகின்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
எனவே ஒவ்வொரு ஆண்டும் காலதாமதம் இன்றி உரிய காலத்தில் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு முறையான பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் தகுதி உள்ள அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவது தவிர்க்கப்பட வேண்டும். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கு சில நாட்கள் முன்னதாகவோ அல்லது ஓய்வு பெறும் நாளன்று பதவி உயர்வுக்கான அவரது முறை வருவதற்கு முன்பே பதவி உயர்வு வழங்கும் வகையில் செயற்கையாக காலி பணியிடங்களை ஏற்படுத்த கூடாது.
அதாவது விடுமுறையில் சென்று காலிப்பணியிடத்தை உருவாக்குவது, தற்காலிக பதவி உயர்வு வழங்குவது போன்று செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மேற்கண்ட அறிவுறுத்தல்களை அனைத்து நியமன அலுவலர்களும் தவறாமல் கடை பிடிக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை சந்திக்கப்போகும் விஜய் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் ஜூன்…
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு HRWF பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக "மகுடம்" விருதுகள் (2025) வழங்கும் விழா சென்னை…
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
This website uses cookies.