மத்திய பாடத்திட்டத்தில் இருந்து மாநில பாடத்திட்டத்திற்கான மாற்றத்தை நோக்கி பயணம் செல்கிறோம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்படும் அனைத்து புத்தகங்களையும் தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில், திருச்சியில் இன்று சிங்காரத்த பகுதியில் உள்ள இருபுத்தகக் கடைகள், இரண்டு ஸ்டால்களை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது :- தமிழ்நாடு பாடநூல்கள் சார்பாக பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளோம். மொழி பெயர்த்துள்ளோம். அந்த புத்தகத்தை எல்லாம் குறைந்தபட்சம் 100 இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் டிபிஐ அலுவலகத்திற்கு தேடி வந்து வாங்குவதை காட்டிலும். புதிதாக கொண்டு வருவதை பெற்றுக் கொள்ளும் வகையில் கொண்டு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டோம்.
தற்போது யாரும் பார்க்காத வ.உ.சி புகைபடத்துடன் கூடிய புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து ஒவ்வொன்றையும் புதிதாக கொண்டு வரும் வகையில் தமிழக முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சென்னையில் ஹிக்கிம்பாதம்ஸ் புத்தக நிலையத்தில் ஸ்டால் அமைத்துள்ளோம். இதேபோல, தமிழகத்தில் திருச்சியில் சிங்காரத்தோப்பு பகுதியில் ராசி மற்றும் சுமதி புத்தக நிலையங்களில் ஸ்டால் அமைத்துள்ளோம்.
பள்ளி மாணவனாக இருக்கும்போது இங்கு தான் புத்தகங்கள் வாங்கினேன். அந்த நினைவுகள் இப்போதும் இருக்கிறது. இதேபோல், தமிழக முழுவதும் 100 இடங்களில் கொண்டு செல்ல உள்ளோம். புதிய கல்விக் கொள்கைக்கு புதிய கமிட்டி உருவாக்குவோம். மூன்றாவது, நான்காவது தவணையாக கொடுக்க இருக்கிற 1200 கோடி மட்டுமல்ல, அடுத்த ஆண்டு கொடுக்கவுள்ள 3800 கோடியும் லிங்க் பண்ணக்கூடாது. அது தனி, இது தனி.
இரண்டில் அது லிங்க் பண்ற வேலை செய்யலாம். கண்டிப்பாக அமைச்சர் என்பதை தாண்டி திமுககாரனாக புதிய கல்வி சட்டத்தை எதிர்க்கக் கூடியவர்கள் தான். தமிழக முதல்வர் என்ன மாதிரியாக ஆலோசனை சொல்கிறார்கள். நம்முடைய மாநிலத்திற்கு என்ன தேவையோ, அதன்படி கல்வி திட்டம் உருவாக்கி உள்ளோம்
முதலாவது மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். அதை நோக்கி தான் எங்கள் பயணம் இருக்கிறது. மாணவர் படிப்பில் அரசியல் செய்யக்கூடாது, புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு என்றும் ஏற்றுக் கொள்ளாது, என தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.