14 மாதமாக ஆணுக்குச் செல்லும் மகளிர் உரிமைத் தொகை.. கலெக்டர் வரை சென்றாலும் நீதியில்லை!

Author: Hariharasudhan
23 November 2024, 12:58 pm

திண்டுக்கல்லில் தனது மகளிர் உரிமைத் தொகை வேறொரு ஆணுக்கு 14 மாதங்களாக கிடைத்து வருவதாக பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர், தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து உள்ளார். இதன்படி, இவரது விண்ணப்பத்திற்கு அனுமதியும் கிடைத்து உள்ளது. ஆனால், அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு பணம் வராமல், குறுஞ்செய்தி (SMS) மட்டுமே வந்து உள்ளது.

இதனால், இவருக்கு வர வேண்டிய மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் 60 வயதான கிருஷ்ணன் என்பவருக்குச் சென்று உள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணன் என்பவரிடம் தெரிவித்த போது, அவர் இரண்டு முறை ஆயிரம் ரூபாயை பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்து உள்ளார்.

ஆனால், ‘இது தொடர்பாக நீங்கள் அரசிடம் முறையிடுங்கள்’ எனக் கூறிய கிருஷ்ணன், இதுவரை எங்களுக்கு அந்தப் பணத்தை அனுப்பவில்லை என அப்பெண் கூறுகிறார். அதேநேரம், இது தொடர்பாக, வட்டாசியர் அலுவலகம், பழனி ஆர்டிஓ, மாவட்ட ஆட்சியர் வரை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

Kalaingar Magalir urimai thogai beneficiaries

சிறப்பு முகாம்களில் கூட புகார் அளித்ததாகக் கூறும் அப்பெண், இது தொடர்பாக சென்னைக்கு நீங்கள் செல்ல வேண்டும் என அரசு அதிகாரிகள் கூறுவதாகத் தெரிவிக்கிறார். இந்த மனு கொடுப்பதற்காக எடுக்கப்படும் ஜெராக்ஸ் உள்ளிட்டவற்றிற்காகவே மாதா மாதம் 300 ரூபாய் வரை செலவாகிறது என்கிறார் அபெண்.

இதையும் படிங்க: தவெகவினரை புரட்டி எடுத்த திமுகவினர்.. போலீசார் கண்முன்னே முட்டிமோதல்!

மேலும், எங்களது வங்கிக் கணக்கின் கடைசி 2 எண்கள் மாறியதாலாயே அவரது வங்கிக் கணக்கிற்குச் செல்வதாக குறிப்பிடும் அப்பெண், இது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 146

    0

    0