தவெக ஓட்டு யாருக்கு? திமுக அரசின் புது வியூகம்.. பறக்கும் Calls!

Author: Hariharasudhan
19 November 2024, 11:44 am

தவெக முதல் மாநாட்டில் பங்கேற்ற நபர்களின் விவரங்களை உளவுத் துறையினர் ரகசியமாக சேகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற்றது. இதில் விஜய், தவெக கொள்கைகள், வழிகாட்டிகள், அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றை அறிவித்து விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு சென்னையில் இருந்து தொண்டர்களை அழைத்துச் சென்றவர்கள் யார், யாரெல்லாம் அழைத்துச் செல்லப்பட்டனர், அவர்களின் வயது மற்றும் வசிக்கும் பகுதி, பாலினம் ஆகியவற்றை வார்டு மற்றும் தொகுதி ரீதியாக உளவுத்துறை சேகரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, தமிழ்நாடு அரசின் நுண்ணறிவுப் பிரிவு போலீசார், இது போன்ற தகவல்களை மாநாட்டில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள் முதல் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் வரை அனைவரிடம் இருந்தும் பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்றதாக கூறப்படும் நிலையில், விழுப்புரம் அருகே உள்ள சென்னையில் அதிகமானோர் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது.

TVK VIJAY MAANAADU SPEECH

இதனால், சென்னையில் இருந்து தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்குச் சென்றவர்களின் விவரங்கள் ரகசியமாக பெறப்படுவதாகவும், இது பாதுகாப்பு மற்றும் தரவு அறிக்கைகளுக்காக மட்டுமே என்றும் சேகரிக்கும் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் தரப்பி கூறப்படுவதாக தவெக நிர்வாகிகள் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: தவெக அவுட்.. அதிமுக யாருடன் கூட்டணி? – ஜெயக்குமார் சூசகம்!

மேலும், உளவுத்துறை போலீசார் சேகரிக்கும் தவெக மாநாட்டு பங்கேற்பாளர்களின் தனிப்பட்ட தகவல்களை வைத்து, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை ஒப்பிட்டு விவரங்களைச் சேகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தற்போது அரசியல் மேடையில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

முன்னதாக, திமுக தனது அரசியல் எதிரி எனக் கூறிய விஜய், ஊழல், லஞ்சம் ஆகியவற்றைக் காரணிகளாகக் கொண்டு திமுகவை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, ‘ஊழல் மலிந்த அரசியல்’ என்று கூறினார் விஜய். இதனால், ஆரம்பம் முதலே விஜய்க்கு எதிராகவே திமுக செயல்படுவதாக கருத்துகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Ajith unhappy with Director என்னை விட்டுருங்க… உஷாரான அஜித் : அதிர்ச்சியில் பிரபல இயக்குநர்!!
  • Views: - 55

    0

    0

    Leave a Reply