டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. கட்-ஆஃப் குறைய வாய்ப்பு?

Author: Hariharasudhan
9 October 2024, 7:11 pm

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 2,206 பணியிடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டு, தற்போது 8,932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் தேர்வுகளின் கீழ் நிரப்பப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி ஆண்டுத் திட்டமும் வெளியிடப்படும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி திட்ட அறிவிப்பில், 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஜூன் 9ஆம் தேதி 7 ஆயிரத்து 247 தேர்வு மையங்களில் சுமார் 15.8 லட்சம் பேர் தேர்வெழுதினர். குறிப்பாக, சென்னையில் மட்டும் 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வினை எழுதினர். இதனிடையே, கடந்த செப்டம்பரில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக உயர்ந்தது.

இதையும் படிங்க: சங்கிகளை பார்த்தால் பரிதாபமா இருக்கு.. உதயநிதி போட்டோவை காலால் மிதித்த வீடியோ.. அவரே கொடுத்த பதிலடி!

இந்த நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூடுதல் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (அக்.9) வெளியான அறிவிப்பில், கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உள்ளது.

இதன் காரணமாக, கட்-ஆஃப் மதிப்பெண் குறையுமா என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு வாய்ப்பு உள்ளதாகவே கல்வியாளர்கள் கருதுகின்றனர். இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் அறிவித்துள்ளது. முன்னதாக, ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதேநேரம், இந்த முறை வனம் மற்றும் பால்வளம் ஆகிய துறைகளின் கீழான பணியிடங்களும் இந்த குரூப் 4 மூலம் நிரப்பப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 190

    0

    0